Monday, December 22, 2014

போகிற போக்கில் எனக்குத்தெரிந்தவை




      பிறர் நம்மைப்பற்றி எடை போடுவது இருக்கட்டும். நம்மை நாமே எடைபோட்டுப் பார்ப்போம். ( உடனே நான் நான் எழுபது கிலோ, நான் எண்பது கிலோ என்று பதிலளிக்காதீர்கள் . அந்த எடை அல்ல இது) நான் கூறுவது சுய மதிப்பீடு பற்றி. நம்மில் எத்தனை பேர் நம்மைப் பற்றி உயர்வான அபிப்பிராயம் வைத்திருக்கிறோம். நம்மில் பலருக்கு அது இல்லை. திறமை இருந்தும் அதை மறுப்போர் பலர் உண்டு . மறைப்போர் பலர் உண்டு. குடத்திலிட்ட விளக்காய் அவர்கள் காணாமல் போவதுண்டு. அவர்களுக்கான கட்டுரை இது. எனக்கு எல்லாம் தெரியும் . எனக்கு எதுவும் தேவை இல்லை என்ற எண்ணம் உங்களுக்கு இருக்கிறதா, அப்படியானால் உங்களுக்கு இந்த க்கட்டுரை தேவையில்லை .. நீங்கள் தொடர்ந்து ஃபேஸ்புக்கில் லைக் போட செல்லலாம்.அல்லது சுடோக்கு போடச்செல்லலாம். இது மற்றவர்களுக்கானது, பிரத்யேகமானது.

         உங்கள் சுய மரியாதையை வளர்க்க உதவும் சில டிப்ஸ் தர உள்ளேன். இவை உங்கள் வாழ்வையே மாற்றி அமைக்கப்போகும் டிப்ஸ் என்றால் அது மிகை இல்லை. சுய மரியாதை என்பது ஒரு குணநலன். தன்னம்பிக்கையை வளர்க்க உதவும் ஒரு காரணி. நம்மை நாமாக உணர வைக்கும் கருவி. என்னடா இது ஓவர் பில்டப் ஆ இருக்கே என்று நினைக்கிறீர்களா? இந்தப்பதிவின் முடிவில் நான் கூறியது உண்மை தானா என்று முடிவு செய்யுங்கள்.

      உங்கள் சுய மரியாதையை வளர்க்க உதவும் சில டிப்ஸ் தர உள்ளேன். இவை உங்கள் வாழ்வையே மாற்றி அமைக்கப்போகும் டிப்ஸ் என்றால் அது மிகை இல்லை. சுய மரியாதை என்பது ஒரு குணநலன். தன்னம்பிக்கையை வளர்க்க உதவும் ஒரு காரணி. நம்மை நாமாக உணர வைக்கும் கருவி. நீங்கள் உங்கள் சுய மரியாதையை வளர்க்க உதவும் சில டிப்ஸ் தர உள்ளேன். இவை உங்கள் வாழ்வையே மாற்றி அமைக்கப்போகும் டிப்ஸ் என்றால் அது மிகை இல்லை. சுய மரியாதை என்பது ஒரு குணநலன். தன்னம்பிக்கையை வளர்க்க உதவும் ஒரு காரணி. நம்மை நாமாக உணர வைக்கும் கருவி. கள் முதலில் விரும்புங்கள். ஒப்பீடு செய்வதால் இரண்டு சாத்திய கூறுகள் ஏற்படுகின்றன.உங்களை விட குறைந்தவர் ஒருவருடன் உங்களை நீங்கள் ஒப்பிடும் போது உங்களுக்கு ஒரு நிறைவு ஏற்படுகிறது. நாம் ஆசிர்வதிக்கப்பட்டவர் என்று உணர்வீர்கள். இது உங்கள் சுய மதிப்பீட்டை உயர்த்தும் . உண்மை தான். ஆனால் பிரச்னை என்னவெனில் இந்தப் பழக்கத்தினால் உந்தப்பட்டு உங்களை விடச் சிறந்தவருடன் உங்களை ஒப்பிடத் தலைப்படுவீர்கள். அப்போது என்ன ஆகும்? நம்முடைய திறமைகள், சிறப்பியல்புகள் ஆகியவற்றை புறந்தள்ளி விட்டு இல்லாதவற்றை நினைத்து ஏங்குவோம். அவருடைய வாழ்க்கை வேறு நம்முடைய வாழ்க்கை வேறு. அவருக்கு அளிக்கப்பட்ட சந்தர்ப்பங்கள் வேறு நமக்கு அளிக்கப்பட்ட சந்தர்ப்பங்கள் வேறு . இதை நாம் உணர வேண்டும். என்றாலும் கொடுக்கப்பட்ட சந்தர்ப்பங்களில் சிறப்பாக செயல்ப்பட்டோமா என்று சரி பார்க்க வேண்டும். அது தான் முக்கியம்.

         அடுத்ததாக நம் மனதை ஆக்ரமிக்கும் எண்ணங்களைப் பற்றி பார்ப்போம்.நம் மனதில் எப்போதுமே நேர்மறை(positive) எண்ணங்களே இருக்க வேண்டும். எதிர்மறை(negative) எண்ணங்கள் நம் மனதை ஆக்ரமித்துக்கொண்டால், அவை நம்முடைய வேலை செய்யும் திறம், மதிப்பீடு செய்யும் திறம் எல்லாவற்றையும் குறைத்து விடும். தினசரி வாழ்க்கையில் எல்லாவற்றையும் நேர்மறையாக எடுத்துக்கொண்டால் மன சஞ்சலம், மனக்கிலேசம் ஆகியவற்றிலிருந்து விடுபடலாம். வேலை செய்ய தடையாய் அமையும் எண்ணங்களைத் தவிருங்கள். உங்களுடைய சிறந்த குணங்கள் என்று எவற்றையெல்லாம் நினைக்கிறீர்களோ, அவற்றையெல்லாம் நீங்கள் மெச்சுங்கள். நீங்கள் நீங்களாய் இருப்பதற்கு பெருமைப்படுங்கள். உங்களை நீங்களே நேசியுங்கள்.
         எண்ணங்கள் மட்டுமல்ல, உங்களைச்சுற்றியுள்ள அனைத்துமே அதை பிரதிபலிப்பதாய் பார்த்துக் கொள்ளுங்கள். உங்களைச் சுற்றி உள்ளவர்கள் உங்களைப்போன்றே நேர்மறை எண்ணங்கள் கொண்டவர்களாகப் பார்த்துக்கொள்ளுங்கள். அப்படி இல்லை எனில் அப்படிப்பட்டவர்களுடன் உங்களை இணைத்துக்கொள்ளுங்கள். உங்கள் நண்பர்கள், சக ஊழியர்கள், குடும்பத்தினர் அனைவரும் தங்களது கிண்டல் மற்றும் கேலி மூலம் உங்களது தன்னம்பிக்கையை உடைக்காதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். பார்க்கும் வீடியோக்கள் , வாசிக்கும் புத்தகங்கள்  என அனைத்தும் உங்களது தன்னம்பிக்கையை சிதைக்காதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்.
         தினமும் காலையில் எழுந்தவுடன் உங்களை எண்ணி பெருமிதம் கொள்ளுங்கள். அதே போல் படுக்கப்போகும் முன்பும் நீங்களே உங்கள் முதுகில் தட்டிக்கொடுங்கள். உங்களது கடந்த கால வெற்றிகளைப் பட்டியலிடுங்கள். சிறியதோ பெரியதோ நீங்கள் சாதனை என்று நினைத்தவற்றைப் பட்டியலிடுங்கள். நீங்களே வியந்து போவீர்கள்., உங்களுக்கு இத்தனை திறமைகளா என்று. உங்கள் சாதனைகள் மற்றும் திறமைகளை எப்போதும் எழுத்தில் பார்த்தால் அது தரும் இன்பமே அலாதி தான். உங்களது சிறந்த குணநலன்களை வரிசைப்படுத்துங்கள். உங்களது வலிமை உங்களை ஆச்சர்யப்படுத்தும். 

           கடைசியாக இரண்டு வார்த்தை. இதை நான் பின்பற்றி பயனடைந்தேன். நீங்கள் சாதிக்க விரும்பும் பத்து செயல்களை ஒரு பேப்பரில் எழுதுங்கள்.ஒரு மந்திரக்கோல் கொண்டு அதில் உள்ளதை சாதிக்கலாம் என்றால்எது முக்கியம் என தேர்நதெடுப்பீர்களோ அதைத் தேர்ந்தெடுங்கள் . இன்னும் இரண்டு மாத காலத்திற்கு அந்த காரியத்தில் கவனம் செலுத்துவேன் என உறுதி பூணுங்கள். தினமும் எப்பாடு பட்டேனும் காலையில் அந்த காரியத்தை முடித்து விடுங்கள் . மதியத்திற்கோ அல்லது இரவிற்கோ அதைத் தள்ளிப் போடாதீர்கள். இரண்டு மாத்த்திற்குள் உங்களுக்கு அது பழகி இருக்கும். வருட இறுதியில் நீங்கள் அதில் கைதேர்ந்தவராக மாறி இருப்பீர்கள். மற்றொன்று .. எதையுமே முதலிலேயே திட்டமிடுங்கள். நாளை செய்ய வேண்டிய காரியங்களை இன்றே எழுதி வைத்துப் பட்டியலிடுங்கள். திட்டமிடல் காரியத்தை சுலபமாக்கும். புதிது புதிதாய்த் திறமைகளை வளர்த்துக்கொள்ளுங்கள்.உலகம் பரந்து விரிந்தது. நாம் கற்றுக்கொள்ள ஏராளமானவற்றை வாரி வழங்குகிறது. நாம் தான் கூழாங்கல் எது வைரக்கல் எது என்று கண்டறிந்து திறம்பட பயனுற வேண்டும். 
  
      நான் முதலில் கூறியது போல் இது உங்கள் வாழ்வை மாற்றி அமைக்கப் போகிறதா என்று நீங்கள் தான் பின்பற்றி கண்டறிய வேண்டும். உங்களை இனி புது மனிதராக சந்திக்க ஆவலுடன் காத்திருக்கும்
                            முருகேஸ்வரி ரவி.



1 comment:

  1. போகிற போக்கில் ....ஆத்தி..எம்புட்டு விஷயத்தை புட்டு புட்டு வச்சிட்டிக!
    உட்கார்ந்து என்ன தான் திறமையிருக்கு அப்படின்னு லிஸ்ட் போட்டா....எழுத்து நின்னுகிட்டு சிரிக்குதுப்பா.....ம்ம்ம்....நமக்குதான் நம்ம முரு எழுதியிருக்காங்கன்னு புரிஞ்சுகிருச்சு...இதோ நீ கொடுத்த நல்ல டிப்ஸ் எல்லாம் கடைப்பிடிச்சிட்டு ஒரு ரெண்டு மாசத்துக்குள்ள புதிய மனுஷியா வலம் வருவேன் ப்பா....தொடர்ந்து எழுது முரு....

    ReplyDelete